சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் துவங்கிய காலம் சுமார் 10000 BC – 4000 BC. அப்போ இருந்து இப்போ வரைக்கும் 5000 வருடங்களுக்கு மேல் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு நல்லது செய்யாமல் இந்த மருத்துவம் உயிர்த்திருக்க வாய்ப்பில்லை, சோ ஏதோ இருக்கு… 🙂 சித்த மருத்துவம் சிவனால் முருகனுக்கு சொல்லப்பட்டு முருகன், அகத்திய முனிவருக்கு சொல்லி, அகத்தியர் போகர் உட்பட 18 சித்தர்களுக்கு சொல்லி அதன் மூலமாக மக்களுக்கு பரவியது என்கிறது சித்த புராணம். சித்தர்கள் என்பவர்கள் […]

மாய ஒளி…!

ஒருத்தருக்கு கால் உடைந்து போகுதுன்னு வச்சுக்குவோம். நம் முன்னோர்கள் என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னா… அந்த ஆளை படுக்க போட்டு இரண்டு பக்கமும் 4 பேர் உக்காந்து கையையும் காலையும் அமுக்கி பிடிச்சுக்குவாங்க. ஒருத்தர் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கையை வச்சு அமுக்கி பார்த்தே அவரோட அனுபவத்தை வச்சு குத்து மதிப்பா எத்தனை இடத்தில, என்ன டிசைன்ல உடைந்திருக்கும்ன்னு கணக்கு போட்டு ஒரு தப்பையை வச்சு கால சுத்தி இறுக்கி கட்டிவிட்டுருவார். 10 நாளைக்கு ஒரு தடவை திறந்து […]

ஒரு வைப்ரேட்டரின் கதை….

இன்னிக்கு தேதிக்கு உலகின் நம்பர் ஒன் செக்ஸ் டாய் – வைப்ரேட்டர். உலக பெண்களின் ஏக்கத்தை தீர்ப்பதில் முக்கியமான பங்கு இதற்கு இருக்குங்கறது யாராலும் மறுக்க முடியாத மேட்டர். ஃபேக் ஆர்கஸம் (Fake Orgasm) பற்றி எழுது மாப்பிள்ளைன்னு நண்பன் ஒருவன் சொல்ல அதற்கான தேடலில் கிடைத்தது இந்த கதை…! சுமார் 700 ஆண்டுகளுக்கு முன், 13’ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்கள் செய்து கொண்ட மன்னர்கள், பெண்களை அந்தபுரத்தில் அடைத்து ‘மட்டும்’ […]

டீ……………………………………. !!

எனக்கு அவ்வளவாக பிடிக்காத இந்த பானம் பாமரர்களுக்கும், வசதியானவர்களுக்கும், இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும், எல்லா மதத்தவருக்கும் வேற்றுமை இல்லாமல் பிடிக்கிறது..அப்படி இதுல என்ன தான் இருக்கோ தெரியல…  இன்னக்கி தேதிக்கு நீங்க எந்த மீட்டிங் ஏற்பாடு பண்ணலும் அதுல டீ கண்டிப்பா இருக்கும்… வெட்கத்தை விட்டு கூட்டங்கள் நடக்கும் போது நீங்க டீ கூட வாங்கி தரலைன்னு சண்டை போன்ற ஆட்களை நிறைய பார்க்க முடிகிறது. சிகிரட் பிடிக்கிற பலருக்கு இது ஒரு உற்ற நண்பன்.. தம்மை ஒரு […]

மார்பக புற்றுநோய்..!

மார்பக புற்றுநோய்…! சில முக்கிய தகவல்கள் இங்கே..

மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிக அளவு தப்பி பிழைக்கிறார்கள். அதற்கு காரணம் பரவலான விழிப்புணர்வே. எனவே ஆரம்ப நிலையில் கண்டறிவது உயிர் காக்க உதவும்.
எப்படி கண்டுபிடிப்பது?
முதல்ல சாதாரண நிலையில் உங்களின் மார்பின் வடிவும், தொடு உணர்வும் தெரிந்து வைத்திருக்கனும். அதற்கு மாதத்தில் பல்வேறு நாட்களில் மார்பினை கண்ணாடியில் பார்த்து, தொட்டறிந்து வைத்து கொள்ளவும். முழு மார்பையும் கழுத்தெலும்பு முதல் மார்பின் அடிக்கோடு வரை விரல் நுனி கொண்டு தொட்டு பார்க்கவும். பின் மெதுவாக அழுத்தி பார்க்கலாம்… இப்படி பார்க்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை…
1) மார்பகம் அல்லது அக்குளில், கட்டி, வீக்கம் அல்லது தடிப்பு.
2) மார்பின் தோலில் ஏற்படும் மாற்றங்கள். குழி விழுதல், சுருங்கி இருத்தல், சிவந்திருத்தல்.
3) காம்பில் ஏற்படும் மாற்றங்கள். வழக்கத்திற்கு மாறாக  உள் பக்கமாக குவிந்திருத்தல், வேறு பக்கம் திரும்பி இருத்தல். (சிலருக்கு இயற்கையாகவே அப்படி இருக்கும். அவர்கள் பயப்பட வேண்டாம்).  
4) காம்பில் நீர் கசிதல். உணர்வு மட்டுப்படுதல், அல்லது வழக்கத்திற்கு மாறான வலி இருப்பது.
அவ்ளோ தான்… இதில் ஏதாவது இருந்தால் மருத்துவரை சந்திக்கவும். மேற்கூறிய அறிகுறிகள் இருந்தாலும் 10’ல் 9 பெண்களுக்கு அது புற்றாக இருப்பது இல்லை. அதனால பயம் வேண்டாம். 
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிக ஆபத்து. ஆனாலும் அனைத்து வயதினரும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக அக்கா, தங்கை, அம்மா ஆகியோருக்கு மார்பக, கர்ப்பப்பை புற்று நோய் இருந்த குடும்ப வரலாறு இருந்தால் மிக கவனமாக இருக்கவும். 
தமிழில் மட்டுமன்றி பிடித்த மொழியில் புற்று நோய் பற்றிய அனைத்து தகவல்கள் பெறுவதற்கான லிங்க் இங்கே இருக்கு. சுய பரிசோதனை செய்ய கேள்வி பதில்களும் இந்த இணையத்தில் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

http://www.cancervic.org.au/languages/tamil.

Circadian rhythm..! Noble prize 

ஒரு நாள் இரவு நார்மலா தூங்க போறீங்க. ஆனா காலையில் நீங்க கண் விழிக்கவில்லை. எல்லோரும் அரண்டு போய் பார்க்கிறாங்க, உங்க இதயதுடிப்பும் மூச்சும் சீராக இருக்கிறது. ஆனால்  உங்களை விழிக்க வைக்க முடியவில்லை….! உங்கள் மூளை லிட்டரல்லி ஷட் டவுன் ஆகி கிடக்கு… !!! எப்படி இருக்கும்… ??
2017’ல் உடலியலுக்கான நோபல் பரிசு, நம் உடலினை முழுதுமாக கன்ட்ரோல் செய்யும் உடலின் Bio Rhythm குறித்த ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக Jeffrey C. Hall, Michael Rosbash and Michael W. Young ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாம எத்தனை மணிக்கு சாப்பிடனும், எப்போ தூங்கனும், எப்போ எழுந்திரிக்கனும்ன்னு முடிவு செய்யும் உடலின் Circadian Rhythm குறித்த ஆராய்ச்சிக்கு தான் இந்த பரிசு…
நீங்க ஆரோக்கியமா இருப்பது இந்த ரிதம் கையில் தான் இருக்கு. தூக்கம், பசி, நீர் பிரிதல், மலம் பிரிதல், வியர்த்தல், உணவை செறித்தல், மூச்சு விடுதல், இதயம் துடித்தல், வேலை நேரத்தில் கவனமாக /ஆக்டிவாக இருத்தல், ஓய்வு நேரத்தில் ரிலாக்சாக இருத்தல்ன்னு எப்போ எங்க என்ன செய்யனும்ன்னு மொத்தமா முடிவெடுத்து உங்களை கேக்காமல்  செய்துட்டே இருக்கும் ஒரு அற்புத ஆட்டோ மெக்கானிசம் இந்த ரிதம். மேலே சொன்னதுல ஒன்னு நடக்கலைன்னாலும் மனிதன் நோயாளி ஆகிறான். 
நீங்க காதலி கூட கொஞ்சிகிட்டோ, அக்குளை சொறிஞ்சுட்டோ, மோட்டுவளைய பாத்துட்டோ, பஸ்டாண்டுல ஜொள்ளு விட்டுட்டோ உங்க சமூக கடமைய ஆத்திட்டிருக்கும் போது, நம்ம செல்லில் இருக்கும் குட்டியூண்டு ஜீன், சூரிய வெளிச்சத்தை வைத்து பூமி சுற்றுவதை முடிவு செய்து, ‘இந்த நேரத்தில் இவன் இதை செய்தால் சரியாக இருக்கும்ன்னு’ முடிவெடுத்து மண்டையில் அடிக்க, நாம உடனே தாகம் எடுப்பதை உணர்ந்து தண்ணீர் குடிக்கிறோம். அல்லது டக்குன்னு கண் முழிச்சு, முதல் பாராவில் வந்த குழப்பங்கள் நேராமல் பார்த்துக்கிறோம். அந்த குட்டியூண்டு ஜீனை கண்டு பிடிச்சதுக்கு தான் நோபல்.
18’ம் நூற்றாண்டில் மைமோசா எங்கிற தாவரம் காலையில் சூரியனை பார்த்ததும் இலையை விரிக்கிறது, மாலையில் மூடிக் கொள்கிறது என்பதை பார்த்த ஒருவர்  (Jean Jacques d’Ortous de Mairan (எனக்கும் பெயர் வாயில் நுழையவில்லை). அதை கொண்டு போய் இருட்டில் வைக்க, அது சரியாக மணி அடித்தார் போல் இருட்டிலும் காலையில் விரிந்து மாலையில் மூடிக் கொள்ள… Circadian Rhythm மனிதனுக்கு புரிய ஆரம்பித்திருந்தது….!!
அப்போதிலிருந்து இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னால் 1984’ல், மேலே சொன்ன நோபல்காரர்கள், முதல்ல ஒரு ‘ஈ’யை வைத்து பரிசோதித்து, ‘இரவில் அதன் உடலில் ஏற்படும் வேதியல் மாற்றம், ஒரு ப்ரொட்டீனை சேமித்து வைத்து அதன் மூலமாக பகல் முழுதும் நம் உடலை கட்டுப்பாடு செய்கிறதுன்னு’ கண்டு பிடிச்சாங்க. ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்க, மேலும் பத்து வருட ஆராய்ச்சிக்கு பின் 1994’ல் இன்னொரு ஜீனையும் கண்டு பிடித்தார்கள். அதன் மூலமாக 24 மணி நேரமும் உடலின் அனைத்து செயல்பாட்டுக்கும் மூல காரணிகளை கண்டறிந்து 1970 முதல் 2017 வரை சுமார் 47 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் நோபலை தட்டியிருக்கிறார்கள்.
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவன் நாகரீகம் அடைய அடைய பல்வேறு புது நோய்கள் உற்பத்தி ஆவதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்ன்னு சொல்றாங்க. உணவு செறித்தல், உடல் சூடு, மூடு, ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடு என பல்வேறு செயல்களை விருப்பத்தின் பெயரில் இனி கூட்ட குறைக்க முடியும் என மருத்துவ உலகம் நம்ப தொடங்கி இருக்கிறது.
சின்ன உதாரணமாக…,
கலைஞரின் circadian rhythm அவருக்கு 94 வயதாவதாக சொல்கிறது. இரண்டு ப்ரொட்டீனை கூட குறைய வைத்து மீண்டும் 20 வயதில் ஒரு கலைஞரை 200 ஆண்டுகள் கழித்து மருத்துவம் கொண்டு வந்து நிறுத்தலாம்… என்பது சங்கரின் கற்பனையை விட ஃபேண்டசியாக இருக்கிறதல்லவா…. 😉
அவ்ளோ தூரம் போக வேண்டாம். தினமும் பல மணி நேரம் கண் விழித்து நம்ம ரிதத்தை கெடுப்பதால் கடந்த 50 ஆண்டுகளில்  obesity, diabetes, sleep disorders, depression, and certain types of cancers, autism, and a variety of dementias, disorders அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. அதில் ஒன்றை குணப்படுத்த முடிந்தாலும் அது மனித குலத்திற்கான பெரும் சாதனை தானே,… 🙂

கிருமி ராஜ்ஜியம்

1900’களில் நல்லா இருக்கிற மனிதர்கள் திடீர்ன்னு வரும் காய்ச்சல், வயிற்று போக்குகளால் ஸ்வாகா ஆகிக் கொண்டிருந்தனர். எதுக்கு சாவுறாங்கன்னே தெரியாம வைத்தியர்கள் குழம்பி கிடந்த நேரம். ஹிப்போக்ரேடிஸ் வேற மனிதர்களின் நோய்க்கு காரணம் விஷ காற்றுன்னு சொல்லி வச்சிருந்தார். இன்னோரு பக்கம் மதவாதிகள் டிசைன் டிசைனா காரணம் சொல்லி குழப்பி அடிச்சிட்டிருன்தாய்ங்க.

அதுக்கு சரியா 40 வருஷத்துக்கு முன்னாடி 1855 வாக்கில், லூயிஸ் பாஸ்டர்ங்கற ஃப்ரென்ச்கார், பால் ஏன்டா கெட்டு போகுதுன்னு மண்டையை பிச்சு ஒரு வழியா ஏதோ ஒன்னு பாலை கெட வைக்குது, அதை சூடு பண்ணா கெட்டு போகலைன்னு கண்டு பிடிச்சு வச்சிருந்தார். ‘வைன்’ கெட்டு போறதையும் அவரால தடுக்க முடிஞ்சது. அப்போதைய ஹீரோ அவர் தான்.

திரும்ப 1900’க்கு வந்தா ஏதோ ஒரு காய்ச்சலில் ஆடு, மாடு, மனிதர்கள்ன்னு அத்தனையும் காலி ஆகிட்டிருந்தது . இப்பவும் விஷ காற்று, கடவுளின் சாபம்ன்னு பீலா விட்டுகிட்டிருந்த மதவாதிகளுக்கு மத்தியில ராபர்ட் கோச்’ங்கிற ஜெர்மன்காரர், “இருங்கடா, பாஸ்டர் சொல்றதை வச்சு பார்த்தா கண்ணுக்கு தெரியாத கிருமி இருக்கும் போலிருக்கு. நான் ஆராய்சி பண்ணி சொல்றேன்”னு. ஆந்த்ராக்ஸ் என்னும் நுண் கிருமி இருப்பதையும், அது தான் அத்தனை சாவுக்கும் காரணம்ன்னும் கண்டு பிடிச்சார்.

மருத்துவ உலகத்துக்கு மிக பெரிய கண் திறப்பு மேட்டர் இது. அதுக்கு அப்புறம் மொத்த உலகமும் மூட நம்பிக்கைகளை விட்டுட்டு, நுண் கிருமிகளை பற்றி தெரிந்து கொண்டு அதை தீர்க்க ஆராய்ச்சி செய்ய துவங்கின. நடுவில உலகப்போர் வந்து அதனால பல்வேறு புது வியாதிகள் முளைச்சு மனிதனை கொத்து புரோட்டா போட்டது. அது “கிருமிகளின் ராஜ்ஜிய” காலம்.

இந்த பக்கமா 1928’ல் ஸ்காட்லாண்டுகாரர் ஃப்லெமிங், பேக்டீரியா பற்றி செய்திட்டிருந்த தன்னோட ஆராய்ச்சி சாம்பிள்களில் அழுக்கு படிஞ்சு, அதனால பேக்டீரியா எல்லாம் செத்து போச்சுன்னு அசிஸ்டன்ட்டை திட்டிட்டு யோசிச்சார்….. பேக்டீரியாக்களை சாகடிச்சது எதுடா?? அப்போ தான் பென்சிலின் பிறந்தது. ஆனால் அதை அப்படியே விட்டுட்டு அவர் வேற வேலையை பார்க்க போய்ட்டார்.

ஒரு 10 வருஷம் கழிச்சு 1938’வாக்கில் ஆக்ஸ்ஃபோர்டில் வேலை பார்த்த இரண்டு பேர், ஃபெலமிங் ஆராய்ச்சி பேப்பரை தூசி தட்டி, பென்சிலின் கிருமிகளை கொல்லுதுன்னு கன்ஃபார்ம் பண்ணினாய்ங்க. அந்த நேரம் பார்த்து ஆக்ஸ்ஃபோர்ட் மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளிக்கு பேக்டீரியா தொற்று காரணமா புண் ஆறல என்ன பண்ணாலாம்ன்னு யோசிச்ச ஒரு டாக்டர், இவங்க கிட்ட இருந்த பென்சிலினை வாங்கி புண் மேல பூசினார் . அதிசயமா அதுவரை கட்டுப்படாத புண் ஆற துவங்குச்சு ஆனா கை வசம் இருந்த பென்சிலின் போதாமல் ஆள் காலி.

1945’ல் தான் உறுதியா கிருமி நாசி’ன்னு ஒன்னை கண்டு பிடிச்சு கிருமிகளின் ஆயிரம் ஆண்டு ராஜ்ஜியத்துக்கு முற்றுப் புள்ளி வச்சாய்ங்க. அப்புறமா, மேலே சொன்ன எல்லோருக்கும் நோபல் பரிசை குடுத்தாங்க. இவ்ளோ பெரிய கட்டுரைக்கு காரணம் நோபல் பரிசு பெற்ற மேடையில் Dr.ஃப்லெமிங் சொன்ன வார்த்தைகள்…

” உயிர்களின் வாழ்க்கை வரலாற்றில், கிருமிகளை போல சாமர்த்தியசாலிகள் இல்லை. அவை இருபது நிமடங்களில் இரு மடங்காக பெருகுவதிலும் சரி, தங்களை காப்பாற்றிக் கொள்ள மரபணுக்களை மாற்றுவதிலும் சரி, படு வேகமாக செயல்படும். இதனால் வரும் காலங்களில், நாம் குடுக்கின்ற மருந்துகளையே எதிர்த்து நின்று ஜெய்த்து விடும்”ன்னு சொன்னார்.

அவர் சொன்னது போலவே 60 – 70 வருடங்களுக்குள் பென்சிலினை கிருமிகள் வென்று விட்டன. பென்சிலின் இன்று வேலை செய்வது இல்லை. அதனால் அதை விட பவரான ஆன்டி-பயாட்டிக்குகள் உபயோகிக்க ஆரம்பித்தாயிற்று.. அதுவும் இன்னும் எவ்ளோ நாளைக்கு என்று தெரியாது….

1987’க்கு பிறகு இந்தியாவில் எந்த ஆன்டி – பயாடிக்கும் கண்டுபிடிக்கப் படவில்லை. இருக்கின்ற ஆன்டிபையாடிக் அனைத்தையும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ தவறாக பயன்படுத்தி கிருமிகளுக்கு ஊட்ட சத்து அளித்து வருகிறோம்.

2010’ல் எடுத்த புள்ளி விபரத்தின் படி 56 % பேர் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ஆன்டி – பயாடிக் சாப்பிடுபவர்கள். 2016’ல் இது 76 % ஆகி இருக்கிறது…. எவ்ளோ சீக்கிரமா எல்லோரும் டாக்டர் ஆகிட்டிருக்கோம் பாருங்க.

இன்றைய நிலைமை.. இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 461 பேர் மருந்துகள் வேலை செய்யாமல் இறக்கிறார்களாம். பூச்சி கொல்லிகள் கேக்காத நிலையில் மீண்டும் ஒரு கிருமிகள் ராஜ்ஜியம் நடை பெற கூடும்.

கொத்து கொத்தாக சாகலாம். 😉 😉